உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடலூரில் கரோனாவிலிருந்து குணமடைந்த 489 பேர் - கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர்: மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரசிலிருந்து 489 பேர் குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல், தகுந்த இடைவெளிகளைப் பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றறிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில், நேற்றுவரை கரோனா தொற்றால் 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.