கடலூர்:திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் வனஅலுவலராக பணியாற்றி வரும் 29 வயது பெண்ணிற்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகும் கணவர் வீட்டில், மனைவியை 25 சவரன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதலாக வரதட்சணையாக கேட்டுத் துன்புறுத்தி வந்தாக கூறப்படுகிறது. வரதட்சணை பெற்றுத்தருவதற்கு, அவர் மறுப்புத்தெரிவிக்கவே கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து அவரைத் திட்டி மனவேதனைக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.
வரதட்சனைக்காக கருக்கலைப்பு செய்து கைதான கணவர், மாமியார் 4 பேர் கைது
இதற்கிடையே, அப்பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்குக் கஷாயம் போன்ற திரவத்தைக் கட்டாயப்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதன் விளைவாக, அவரின் கர்ப்பம் கலைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து வனஅலுவலரான அந்தப் பெண், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், பெண்ணை வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்துள்ளது உண்மை என்று நிரூபணமானதைத் தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கணவர், மாமியாரை இன்று (மார்ச் 16) காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்' - தமிழ்நாடு அரசு அனுமதி