தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: கடலூரில் புதிதாக 385 பேருக்கு தொற்று

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒரே நாளில் 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: கடலூரில் இன்று புதிதாக 385 பேருக்கு கரோனா உறுதி!
Corona details

By

Published : Aug 30, 2020, 10:59 PM IST

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்று (ஆகஸ்ட் 29) வரை 10 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) மேலும் 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 140ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, 7ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று மேலும் 483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 980ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் நேற்று வரை சிகிச்சைப் பலனின்றி 115 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details