உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுதப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துவருகின்றனர். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 382 பேர் கைது - corona latest news
கடலூர்: கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 382 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும், அப்படி உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த முழு ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றிய 382 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 232 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:கடலூரில் 26 பேருக்கு கரோனா உறுதி; 42 கிராமங்களுக்குச் சீல்