தமிழகம் முழுவதும் 12 வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று கடலூர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களான தனுஷ்வர், விக்னேஷ், ஸ்ரீஹரி, பரணி, அபினேஷ் உள்ளிட்ட 5 நண்பர்களும், தங்கள் இறுதி தேர்வை எழுதி முடித்த பின் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
கடலூர் வெள்ளி கடற்கரையில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு! - 3 student died in cuddalore silver beach
கடலூர்: வெள்ளி கடற்கரையில் குளிக்கச் சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது ஐந்து மாணவர்களும் அலையில் சிக்கினர். இதில் தனுஷ்வர், விக்னேஷ், ஸ்ரீஹரி ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததால், அவர்களின் உடல் கரை ஒதுங்கியது. அலையில் சிக்கிய அபினேஷ் என்ற மாணவரை மட்டும் உயிருடன் மீட்ட காவல்துறையினர், அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அலையில் சிக்கி காணாமல் போன பரணிகுமார் என்ற மற்றொரு மாணவரை கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறுதி தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் கடலில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள் உயிரிழந்ததால் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.