கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 10) வரை கரோனா தொற்றால் 5ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 11) மேலும் 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு: கடலூரில் ஒரே நாளில் 281 பேருக்கு தொற்று உறுதி! - கரோனா தொற்று
கடலூர்: கரோனா அதிகளவில் பரவிவரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 281 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 347ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 ஆயிரத்து 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2ஆயிரத்து736 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இன்று மூன்று பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது.