கரோனா வைரசின் தாக்குதலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்திற்கு கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பிய 810 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 28 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த மேலும் 425 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் கிராம பாதுகாப்பு குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், 900 படுக்கைகள் கையிருப்பு உள்ளது. மேலும் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்புக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு