தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் இன்று 239 பேருக்கு கரோனா உறுதி! - கடலூர் கரோனா எண்ணிக்கை

கடலூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு: கடலூரில் இன்று 239 பேருக்கு கரோனா உறுதி!
Cuddalore corona cases

By

Published : Aug 19, 2020, 8:59 PM IST

கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் 7ஆயிரத்து332 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 239 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 571ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 602 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் நேற்று வரை 4 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று 196 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 86 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details