தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch Video: 2 வயது குழந்தையை தெரு நாய் கடித்த கொடூரம் - தாயின் உருக்கமான பதிவு - குழந்தையை தெரு நாய் கடித்த கொடூரம்

Watch Video: நெய்வேலியில் 2 வயது குழந்தையை தெரு நாய் கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் குறித்து குழந்தையின் தாய் உருக்கமான விழிப்புணர்வுக் காணொலியைப் பதிவு செய்துவெளியிட்டுள்ளார்.

தாயின் உருக்கமான பதிவு
தாயின் உருக்கமான பதிவு

By

Published : Dec 31, 2021, 5:53 PM IST

கடலூர்:Watch Video: நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் தமிழரசியை ஓசூர் சபரிநாத் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அந்தக் குழந்தை கடந்த ஒரு மாதமாக, அவரது தாத்தாவான சேகர் வீட்டில் இருந்துள்ளது.

அவருடைய தாத்தா சேகர் கடந்த சில தினங்கள் முன்பு, நெய்வேலி மெயின் பஜாரிலுள்ள கோல்டன் ஜுப்ளி பூங்காவிற்கு பேரனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தை நீர் கேட்டுள்ளார்.

சேகர், நீர் பாட்டில் எடுத்து வருவதற்குள் அங்கிருந்த தெரு நாய்கள் குழந்தையை சூழ்ந்து வெறித்தனமாக கடித்துக் குதறியது.

பின்னர், போராடி குழந்தையை மீட்ட அவர் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் தாய் தமிழரசி, ஒரு உருக்கமானப் பதிவை காணொலியில் பதிவிட்டுள்ளார்.

தாயின் உருக்கமான பதிவு

அதில், 'என் குழந்தைக்கு ஏற்பட்டது போல் எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அரசு பிடிக்க முன்வர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:வீட்டின் வெளியே இருந்த R15 பைக் மாயம் - சிசிடிவி மூலம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details