வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்பத்தார்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில ஹோட்டல்களில் வெங்காயத்தை முதன்மைப்படுத்தி, தயாரிக்கும் உணவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலூரில் பிள்ளையார் கோயில் அருகே இயங்கும் கணினி விற்பனைக் கடையின் விளம்பரப் பதாகை பொது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு கணினி அல்லது லேப்டாப் வாங்கினால், ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.