கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் என்ற கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று காலை இரண்டாவது தளத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.
சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்ச ரூபாய் வழங்க ஒப்புதல் - 15 lakh to the families of the victims
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு 15 லட்ச ரூபாய் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் அறிவித்திருந்த நிலையில் தற்போது தொழிற்சாலை சார்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்க கோட்டாட்சியர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல் உடற்கூராய்வு நடைபெற்றது வருகிறது
இதையும் படிங்க:சிப்காட் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு!