கடலூர்:பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளியாக ஏழு ஆண்டுகள் வேலை செய்துவந்தார்.
செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராசு கொலைசெய்யப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் திமுக எம்பி ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிந்து ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ரமேஷ் கடலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.