கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளி கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 10) 10ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் சுவரொட்டி படம் ஒன்றை வடிவமைத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.