சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அந்த வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய 700 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 129 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.