தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கொடூரம்: மதுபோதையில் இளைஞர் கொலை - intoxication

கோவை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்

By

Published : May 22, 2019, 12:29 PM IST

கோவை போத்தனூர் அருகேயுள்ள ஸ்ரீ ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் பிரிட்டோ மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு ஜான் பிரிட்டோ தனது நண்பர் பிரவீன் என்பவருடன், அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது போதையில் போத்தனூரைச் சேர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து, ஜான் பிரிட்டோ அவரது நண்பர் பிரவீன் உடன் இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில், ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுபோதையில் தகராறு ஏற்பட்டு இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details