கோவை செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனமரத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் அதைக் கண்டு செல்வபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரிடமிருந்த அடையாள அட்டையைக் கொண்டு அவர் பெயர் ரமேஷ்(30) என்பதையும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதையும் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர் அங்கு தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதும், கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் அதிகமாக தொடர்புகொண்டிருப்பதும் தெரியவந்தது.