பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கௌதம். பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த 7ஆம் தேதியன்று அவரது 16 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்கு அச்சிறுமியின் தந்தை, மாமா, அண்ணன் ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். அவர்கள் கௌதமைக் கண்டவுடன், ஆத்திரத்தில் கட்டை, கிரிக்கெட் பேட் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.