கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அச்சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அச்சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார்.
நாளடைவில் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாயார், இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, பாபு என்ற இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி ரகசியத் திருமணம் செய்ததாகவும், யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் இச்சைக்கு ஆளாக்கியதால், தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.