கோயம்புத்தூர் சாடிவயல் குற்றால அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றால வனப்பகுதிக்குள் காரில் சென்ற இளைஞர்கள் அங்கிருந்த மலைப்பாம்பு ஒன்றை துன்புறுத்தி அதனை டிக்-டாக் காணொலியாகப் பதிவிட்டுள்ளனர்.
அந்தக் காணொலி அப்பகுதி மக்களிடையே வைரலானதையடுத்து, அது குறித்து போளுவாம்பட்டி வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மலைப்பாம்பை துன்புறுத்தி டிக்-டக் அந்த விசாரணையில் நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (25), விஜய் (27) உள்ளிட்ட ஆறு இளைஞர்கள் அனுமதியின்றி குற்றால வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவர்கள் ஆறு பேரும் அனுமதியின்றி குற்றால வனப்பகுதிக்குள் நுழைந்தற்காகவும், வன உயிரினங்களைத் துன்புறுத்தியதற்காவும் கைதுசெய்து அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க:காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!