தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்' - botanical garden

கரோனா காலத்தில் கிராமத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா பறவைகளுக்கான வசிப்பிடமாகவும், மூலிகை வனமாகவும் மாறியுள்ளது. வீட்டில் முடங்கிய காலத்தை பயனுள்ளதாக்கிய இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'
கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'

By

Published : Sep 20, 2021, 9:27 PM IST

கோயம்புத்தூர்:உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டாலும், 2020 ஆம் ஆண்டு வேகமாக பரவி அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.

4000 மரங்களை கொண்டு பூங்கா

இந்தநிலையில் தங்களது கரோனா ஊரடங்கை பயனனுள்ளதாக மாற்றியுள்ளனர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள். கோவை மாவட்டம் கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சங்கோதிபாளையம் கிராமத்து இளைஞர்களின் முயற்சியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவை உருவாக்கியுள்ளனர். பல வகை செடிகள், 300 வகையான மரங்கள் உள்பட 4000 மரங்கள் நடப்பட்டு அப்பகுதியே பசுமையாக காணப்படுகிறது.

கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'

சுத்தமான ஆக்ஸிஜன் காற்று

இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் பூபதி கூறுகையில், "கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் கரோனா ஊரடங்கு அறிவித்ததால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இளைஞர்கள், மாணவர்களின் திறமையை வெளி கொண்டு வரும் வகையிலும் அவர்களது உழைப்பை நல்ல முறையில் பயன்படுத்தி 'மகிழ் வனம்' தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது.

'மகிழ் வனம்' தாவரவியல் பூங்கா

ஐந்து ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் நட்சத்திர வனம், மூலிகைப் பண்ணை, அடர்வனம், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில் நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மகிழ் வனத்தில் பறவைகளுக்கான கூடுகள், தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அது தவிர அங்கு தேனீ வளர்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து நடைப்பயிற்சி செல்வோருக்கு சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை கொடுக்கிறது. இளைஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வனம் மற்ற கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

'மகிழ் வனம்' தாவரவியல் பூங்கா

ஊர்மக்கள் உதவிடன் மகிழ் வனம்

இது குறித்து கிராமத்து இளைஞர்கள் கூறுகையில், " கரோனா காலத்தில் வீட்டில் முடங்கிய நிலையில் ஊர் பெரியவர்களின் ஆலோசனைப் படி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து மகிழ் வனத்தை உருவாக்கினோம். இறுக்கமான மனநிலையில் இருந்து தங்களை மாற்றிக்கொள்ள இது உதவியாக இருந்தது.

ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து இந்த அழகான மகிழ் வனத்தை உருவாக்கினோம். இதுபோன்று அனைத்து கிராமத்திலும் இயற்கையை பாதுகாக்க தங்களால் முடிந்த பணிகளை இளைஞர்கள், மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்" என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: கிராம சபை கூட்டம் - அரசு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details