கோவை மாவட்டம், சூலூர் அருகிலுள்ள பூரண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி,38, ஊரடங்கு அமல்படுத்தியலிருந்து வீட்டிலிருந்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களாக தனக்கும் கரோனா வைரஸ் தொற்று வந்து விட்டது என்று அடிக்கடி தனக்குத் தானே பேசி கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து அவரை அவரின் மனைவி சுதா, தம்பி மகன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது செஞ்சேரிமலை பகுதியில் வாகனத்தை நிறுத்திய நிலையில், பழனிசாமி அருகில் ஓடி கொண்டிருந்த பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.