கோயம்புத்தூர்: வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக வேட்டை தடுப்புக் காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட பகுதியான செங்குத்துப் பாறை மாணிக்கப் பகுதியில், வன தடுப்புக் காவலராகப் பணி புரிபவர் ஜிம்சன். அதே பகுதியைச் சேர்நத ஷாஜூமோன் என்பவருக்குச் சொந்தமான கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் வேட்டை தடுப்புக் காவலராகிய ஜிம்சன் சரியான முறையில் பணியில் ஈடுபடவில்லை என தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வனக்காவலரை தாக்கிய இளைஞர் கைது இந்தநிலையில், சக நண்பர்கள் ஷாஜூமோனை தடுத்து நிறுத்தியும், தன்னுடைய காலால் எட்டி உதைத்துள்ளார். உடனடியாக வனத்துறை ரேஞ்சர் நடராஜனுக்குத் தெரிவிக்கப்பட்டு வனகாப்பாளர் ஷேக் உமர் தலைமையில் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் ஏராளமான வேட்டை தடுப்புக் காவலர்கள் உடனிருந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு!