கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், தனது நண்பர்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை செய்து வந்தார்.
மேலும், இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அடிக்கடி விளையாடி வந்தார். இந்த சூதாட்ட விளையாட்டை நிறுத்திக் கொள்ளும்படி அவரது மனைவி சண்டையிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இருந்தபோதிலும், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய ஜீவானந்தம், தனது நண்பருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக பயன்படுத்தி, பணத்தை இழந்துள்ளார். 20 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் இழந்ததால் மனமுடைந்த ஜீவானந்தம், நேற்று (நவ.02) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.