தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை! - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: அரசு வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

By

Published : Oct 19, 2020, 8:33 PM IST

கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் மனோஜ் குமார் (31). இவர் கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் அரசு வேலைக்கு முயற்சி செய்துவந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால் மனமுடைந்த அவர் குடிபோதையில் நேற்று (அக். 19) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மனோஜ்குமாரின் தந்தை துரைசாமி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details