தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பயங்கரம்: காதலிக்க மறுத்த பெண் கொலை! - young girl murder in kovai

கோவை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை காவல்துரையினர் தேடி வருகின்றனர்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

By

Published : Jul 18, 2020, 3:26 PM IST

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடம் ரித்தீஷ்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா பேரூர் தமிழ் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், திடீரென ஐஸ்வர்யா ரித்தீஸிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் நேற்று (17.07.20) இரவு ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரித்தீஷ் தன்னிடம் ஏன் பேசவில்லை? என்றும், மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இந்தக் காதலில் தனக்கு விருப்பமில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காதலிக்க மறுத்த பெண் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இளைஞர் ரித்தீஷ்

இதனால் ஆத்திரமடைந்த ரித்தீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றிலும், கையிலும் மாறி மாறி குத்தியுள்ளார்.

அவரின் அலறல் சத்தத்தை கேட்ட ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் ரித்தீஷ் கத்தியால் தாக்கியுள்ளான். மேலும் இவர்கள் இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்த போது, ரித்தீஸ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜஸ்வர்யா இன்று (ஜூலை18) காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான கொலையாளி ரித்தீஸை காவல்துரையினர் தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதையும் படிங்க:வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை - இருவர் கைது; 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details