தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் உயிரிழப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கோயம்புத்தூர்: ரயில் நிலையத்திற்கு வந்த ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மீன் பெட்டிகளை இறக்க கால தாமதமானதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் உயிரிழந்தன.

ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் இறந்தன
ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் இறந்தன

By

Published : Mar 13, 2021, 4:14 PM IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு மீன் குஞ்சுகள் அடங்கிய பெட்டிகள் வந்தன.

நேற்று (மார்ச் 13) காலை அந்த ரயிலானது கோவை வந்தபோது பெட்டிகளை இறக்க கால தாமதமானதால், ரயில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது.

மீண்டும் இன்று (மார்ச் 13) காலை அதே ரயில் கோவை வந்தது. அப்போது மீதமுள்ள பெட்டிகளை இறக்கி, அதனை திறந்து பார்த்தபோது ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் உயிரிழந்து கிடந்தன.

கோவை வந்த 400 பெட்டிகளில் 180 பெட்டிகள் மட்டும் இறக்கப்பட்டன. கால தாமதத்தால், 220 பெட்டிகள் இறக்க முடியவில்லை என மீன் குஞ்சுகளை ஆர்டர் செய்தவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வலசை வரும் பறவைகளுக்காக 9ஆயிரம் மீன் குஞ்சுகள்!

ABOUT THE AUTHOR

...view details