தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக தேனீக்கள் தினம் - கோவை ஆட்சியரகத்தில் நடந்த கண்காட்சி! - bee day exhibition today

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தேனீக்களை பாதுக்காக்க வேண்டும்-இன்று(மே20) உலக தேனீக்கள் தினம்
தேனீக்களை பாதுக்காக்க வேண்டும்-இன்று(மே20) உலக தேனீக்கள் தினம்

By

Published : May 20, 2022, 10:13 PM IST

கோவை: உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தேன் வகைகள், தேனீ வளர்ப்பு முறை விளக்கம், தேன் எடுக்கும் கருவிகள், தேன் மெழுகு சிலைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தேன் எடுக்கும் கருவிகள் குறித்தும், தேன் வளர்ப்பு முறை குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டறிந்து தேனை சுவைத்தார். இந்த கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேனீ வளர்ப்பு முறை குறித்தும் தேன் வளர்ப்பு கருவிகள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

மேலும் தேன் மற்றும் தேன் மெழுகு சிலைகள் விற்பனையும் செய்யப்படுகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இதையும் படிங்க:தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு, 18 பேர் கவலைக்கிடம்!

ABOUT THE AUTHOR

...view details