கோயம்புத்தூர்: கரும்புக்கடை பகுதியில் வசிப்பவர் பாத்திமா.இவரது கை மற்றும் கால்கள் செயல் இழந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான், 10 ஆண்டுகள் முன் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
10 வருடங்கள் கடந்தும் தனது கணவரை விசாரணை கைதியாக வைத்துள்ளதாகவும், தன்னுடைய கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.
இது குறித்து பாத்திமா கூறுகையில், தனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும் - எடப்பாடி பழனிசாமி