தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழியார் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யாணை.. காரணம் என்ன? - ஆனைமலை புலிகள் காப்பகம்

Elephant death: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் 25 வயது மதிப்புத்தக்க பெண் யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அடர்ந்த வனத்துக்குள் இறந்து கிடந்த பெண் யாணை
பொள்ளாச்சி அடர்ந்த வனத்துக்குள் இறந்து கிடந்த பெண் யாணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 9:03 PM IST

கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள அடப்பன் புளியமரம் சரக பகுதியில், வன ஊழியர்கள் இன்று (டிச.22) அன்றாட ரோந்துப் பணி மேற்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அப்பகுதியில் காட்டு யானை ஒன்று கீழே படுத்தபடி கிடப்பதை கண்ட ஊழியர்கள், யானை அருகே சென்று பார்த்தபோது, அந்த யானை உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இது குறித்து வன ஊழியர்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர், மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் யானையின் உடலுக்கு உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் இறந்தது பெண் யானை எனவும், இதன் வயது சுமார் 25 முதல் 30 வரை இருக்கலாம் எனவும், யானை இறந்து இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் உபாதைகளால் யானை இயற்கையான முறையில் இறந்திருக்கலாம் எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:“பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மத்திய நிதியமைச்சர் அவமானப்படுத்தி உள்ளார்” - தங்கம் தென்னரசு பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details