கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மனைவி ஜொகரா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கோட்டை மேடு பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மின் கம்பிகள் அறுந்து தொங்கியுள்ளது.
இந்நிலையில் ஜொகரா துணி காயப்போடும் கம்பியில் மின்சாராம் கசிந்துள்ளது. இதனையறியாமல் அவர் துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.