தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: குறைந்த விலையில் மாஸ்க், கிருமிநாசினி விற்கும் சுய உதவி குழு பெண்கள் - குறைந்த விலையில் கிருமிநாசினி விற்கும் சுய உதவி குழு

கோவை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மகளிர் சுய உதவி குழுக்கள் குறைந்த விலையில் மாஸ்க், கிருமி நாசினிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விற்றனர்.

women club selling corona mask and antiseptic in low price
women club selling corona mask and antiseptic in low price

By

Published : Mar 20, 2020, 9:23 AM IST

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் அதிக இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசு அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு பதாதைகளை வைத்துவருகிறது. சில தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்து தங்களால் இயன்ற உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கிவரும் 15 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து குறைந்த விலையில் கரோனா மாஸ்க், கிருமி நாசினி பொருள்களை தயாரித்து விற்றுவருகின்றனர்.

நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் காண்பிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவந்தனர். விலை குறைவாக இருந்ததால் அங்கு வந்த மக்களும் அதை வாங்கிச் சென்றனர். இவர்கள் விற்கும் மாஸ்க் ஆனது பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிருமிநாசினி ஒரு லிட்டர் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குறைந்த விலையில் மாஸ்க், கிருமிநாசினி விற்கும் சுய உதவி குழு பெண்கள்

வெளியில் உள்ள கடைகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாள்கள் விற்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தங்களை தொடர்புகொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...கரோனா விழிப்புணர்வு: நாமக்கல்லில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details