தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரிலிருந்து வீசப்பட்ட பெண்ணின் உடல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு - latest coimbatore crime news

கோவை: ஓடும் காரிலிருந்து பெண்ணின் உடல் ஒன்று சாலையின் நடுவே வீசப்பட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Sep 7, 2021, 11:42 AM IST

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே நேற்று (செப்டம்பர் 6) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட மக்கள் பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் ஏறியதால் அவர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியாமல் இருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் முதற்கட்டமாக, அவர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரித்தனர். ஆனால் அவர் உயிரிழந்த இடத்தின் அருகிலிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் காட்சி ஒன்று வெளியானது.

சிசிடிவி காட்சி

அதில், அப்பெண்ணின் உடலை ஸ்கார்ப்பியோ காரில் வந்த சிலர் சாலையில் வீசிவிட்டு வேகமாகச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் உயிரிழந்த பெண் யார், ஸ்கார்ப்பியோ கார் யாருடையது என்பன குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details