நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(35). இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு ஆறு வயதில் அபிஷேக் என்ற மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக அருணை பிரிந்து திவ்யா கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்துவந்தார்.
அதன்பிறகு, கோவில்மேட்டில் உள்ள ஒரு மிக்சர் கம்பெனியில் திவ்யா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜதுரை (30) என்பவருடன் திவ்யாவுக்கு திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது உறவுக்கு திவ்யாவின் மகன் அபிஷேக் இடையூறாக இருந்ததால், அவரை திவ்யா அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அபிஷேக்கிற்கு உடல் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். பின்னர், அபிஷேக்கின் உடல் முழுக்க காயம் இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.