தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடையைக் கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் - Woman swept away by flood in search

கோவை: பேரூர் அருகே ஓடையை கடக்க முயன்ற பெண் கூலித் தொழிலாளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணி தீவிரம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணி தீவிரம்

By

Published : Oct 17, 2021, 1:02 PM IST

கோவை, பேரூர், மத்திபாளையத்திலுள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதன் - விஜயா தம்பதியினர். இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

விஜயா, மத்திபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்16) மதியம் பணி முடித்துவிட்டு சக தொழிலாளர்களுடன் விஜயா வீடு திரும்பியுள்ளார். அப்போது மழை பெய்து வந்த நிலையில், தொழிலாளர்கள் அருகே உள்ள ஓடையைக் கடக்க முயன்றுள்ளனர்.

அவர்களில், முதலாவதாக விஜயா ஓடையைக் கடக்க முயன்றநிலையில், திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வெள்ள நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்

இதனையடுத்து சக தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் தொண்டாமுத்தூரில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் விஜயாவை தேடி வருகின்றனர்.

நேற்று மாலை வரை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி முழுவதும் தேடியும் விஜயா கிடைக்காததால் இரவு எட்டியதைத் தொடர்ந்து தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (அக்.17) காலை முதல் மீண்டும் அப்பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய், மகள் உயிரிழப்பு - திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details