தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் பெண் யானை உயிரிழப்பு: பீதியில் மக்கள்!

கோவை: வால்பாறை அடுத்துள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதி அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman elephant death valpari
வால்பாறையில் பெண் யானை உயிரிழப்பு - பீடியில் மக்கள்!

By

Published : May 3, 2020, 1:50 PM IST

வால்பாறை அடுத்துள்ள ஆனைமுடி எஸ்டேட், பன்னிமேடு இடையே காட்டுப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு பெண் யானை ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடந்தது. இதனைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து வால்பாறை மானாம்பள்ளி வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்த வனத் துறை சரக அலுவலர் நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலைக் கைப்பற்றினார்.

விசாரணையை மேற்கொண்ட அவருக்கு, இந்த யானை கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாக கேரளா பகுதியிலிருந்து வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், கால்நடை மருத்துவர் சுகுமாரன் யானையின் உடலை ஆய்வு செய்தபோது உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் யானை உயிரிழந்துள்ளதாக அறிவித்தார். இறந்த யானைக்கு வயது 25 என மதிப்பிடப்படுகிறது.

இறந்த யானையை அருகில் உள்ள பகுதியிலேயே வனத் துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைத்தனர். யானை இறப்பு குறித்து வால்பாறை சரக வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வால்பாறையில் பெண் யானை உயிரிழப்பு - பீதியில் மக்கள்!

கரோனா பரவிவரும் சூழலில் பெண் யானை உடல்நலம் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :'கும்மியாட்டம் ஆடிய இளைஞர்கள்...' - கரோனா விழிப்புணர்வில் சூலூர் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details