கோவை மாவட்டம் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (70). இவரது மனைவி வள்ளியம்மாள் (63). இவர்களது மகன் விசைத்தறி உரிமையாளர் தங்கராஜ் (45). இவரது மகன் விஜய் ஆனந்த் (17).
இந்நிலையில் வள்ளியம்மாள் இன்று காலை தனது பேரன் விஜய் ஆனந்துடன் கருமத்தம்பட்டியில் நடைபெறும் ஆதார் அட்டை திருத்தச் சிறப்பு முகாமுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தூத்துக்குடியிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.