தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வாடகை பிரச்னையால் பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி - தமிழ்நாடு மாநில செய்திகள்

கோயம்புத்தூர்: வீட்டு வாடகை பிரச்னையால் பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி
பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

By

Published : Feb 23, 2021, 10:23 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் அப்பகுதியில் சாலை ஓரமாக பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அவரிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயா மரக்கடை பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர் கீழே இறங்கவில்லை.

பின்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சமரசம் செய்து விஜயாவை கீழே இறங்க வைத்தனர். தற்போது இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் செல்போன் டவரிலிருந்து குதித்த இளைஞர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details