இதுகுறித்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கூறுகையில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் ஆம்புலன்ஸ்களில் 10 பெண்கள் உள்பட 40 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகக் கட்டடம் ஒன்றில் ஒய்வெடுக்கும் அறைகள் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அறைகளும் 20 நாள்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்டன.
தங்க இடமின்றி தவிக்கும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்க இடமில்லாததால் அதற்கு தகுந்த ஏற்பாடு செய்துதருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து உலகை உலுக்கும் கரோனாவால் அனைத்து மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் ஆம்புலன்ஸ் பணியாளர்களும் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மருத்துவமனையில் தங்க இடமில்லாததால் சாலையோரங்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு ஓய்வெடுக்கும் அறைகளுக்கும், உணவிற்கும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க ரூ.50 லட்சம் நிதி!