கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் சில தினங்களுக்கு முன்பு யானை ஒன்று தாக்கி இருவர் உயிரிழந்தனர். தற்போது அப்பகுதியில் வனத் துறையினர் 24 மணிநேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரோந்துக்குச் சென்ற வனத் துறையினரை விரட்டிய யானைக் கூட்டம் - காட்டு யானை
கோவை: ரோந்துப் பணியில் சென்ற வனத் துறையினர் வாகனத்தை காட்டு யானைக் கூட்டம் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
elephant
இந்நிலையில் இன்று (ஜூன் 25) காலை நவமலைப் பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டபோது சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த யானைக்கூட்டம் வனத்துறை வாகனத்தை துரத்த ஆரம்பித்தது. பின் வனத் துறையினர் அபாய ஒலி எழுப்பி யானை கூட்டத்தை விரட்டினர்.
இதனையடுத்து ஆழியார் அணை, குரங்கு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.