கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, செந்நாய் கூட்டம், கருஞ்சிறுத்தை, காட்டு மாடு என பல்வேறுபட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கேரள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 800க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் வால்பாறை, சிறுகுன்றா, சின்கோனா, கவர்க்கல், வாட்டர் பால் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாகச் சுற்றி வருகிறது.
யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் நியாய விலை கடைக்குள் புகுந்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி வருகிறது.