தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் விழுந்த காட்டு மான் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு - 40 அடி கிணற்றில் விழுந்த மான்

கோவை: பொள்ளாச்சி அடுத்த நாட்டுக்கல் பாளையத்தில் கிணற்றில் விழுந்த காட்டு மானை நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டு மான் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
கிணற்றில் விழுந்த காட்டு மான் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

By

Published : Aug 29, 2020, 5:34 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நாட்டுக்கல் பாளையத்தில் சிவக்குமார் என்பவரது 40 அடி கிணற்றில் காட்டு மான் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவக்குமார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நாட்டுக்கல் பாளையத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறக்கி சுமார் 4 மணி நேரமாக போராடிய மானை உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட மான் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன பகுதியில் விடப்படும் என துணை கள இயக்குநர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details