கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, மாங்கரையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. பேருந்துகள், லாரிகள் போன்ற கன ரக வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் யானைகள் தற்போது மாலை நேரங்களிலேயே சாலைக்கு வருகின்றன.
இந்நிலையில், நேற்று யானை ஒன்று எவ்வித ஆராவாரமுமின்றி, சாலையில் மெதுவாக நடந்து சென்றுள்ளது.
இதனை அவ்வழியே சென்ற மக்கள் தங்களது செல்ஃபோன்களில் படம் பிடித்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் இது போன்று காட்டு விலங்குகள் சலையிலோ ஊருக்குள்ளோ வருவது தற்போது வழக்கமாகிவருகிறது.
இதையும் படிங்க:மனிதர்களுக்கு பூட்டு... விலங்குகளுக்கு சுதந்திரம்!