ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகரன் (51), நாகரத்தினம் (46) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று (பிப்.23) காலை ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டு அவரை கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சேகரன் நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவியிடம் மருத்துவர் தெரிவித்த நிலையில், அதிர்ச்சி அடைந்த நாகரத்தினம் மருத்துவமனையின் 7ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.