கோயம்புத்தூர்: ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங் (29). இவரது மனைவி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக சேதுவின் மனைவிக்கும், நீலிகோணாம் பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (23)(இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய, சேதுவின் மனைவியும், குணசேகரனும் திட்டமிட்டனர்.
கணவரை தாக்கிய மனைவி
இந்நிலையில், ஜூலை 25ஆம் தேதி இரவு அந்தப் பெண், குணசேகரன் அவரது நண்பர்கள் மூர்த்தி (17), அன்பு (16), மதன்குமார் (18), ஆகாஷ் (17) ஆகியோர் இணைந்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சேதுராஜாராமை கத்தியால் தாக்கினர். அப்போது, அவர் சத்திமிடவே அக்கம்பக்கத்தினர் வந்ததால அப்பெண்ணை தவிர்த்து அனைவரும் தப்பி ஓடினர்.