மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில் கடந்த 25ஆவது நாள்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரில் டெல்லியில் நடைபெறும் போராட்டம் இன்று (டிச. 21) வரை தொடர்கிறது.
வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்கும் கூட்டம் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் வேளாண்மைச் சட்டங்களின் நன்மைகள் குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட கிணத்துக்கடவு ஒன்றியம் சார்பாக ஜக்கார்பாளையத்தில் வேளாண் சட்ட மசோதா பயன்பாடு பற்றியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய உறுப்பினர் சேர்க்கை, இரண்டு பள்ளிகளில் மாணவ, மாணவியர் பயன்படும் வகைகள் ஸ்மார்ட் கிளாஸ் பயன்பாட்டிற்கு பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் வரவில்லை
பின்னர் அண்ணாமலை பேசுகையில், "டெல்லி தலைநகரில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்ட மசோதவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து விவசாயிகள் வரவில்லை.
காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்ட மசோதா குறித்து பேசும் பொழுது சட்டம் குறித்து தெரியாமல் விவசாயிகளைத் தடுக்கின்றனர்.
பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை விவசாயிகள் நலன் Vs டிராமா மாஸ்டர்கள்
பிரதமர் மோடி விவசாயிகள் நலன்கருதி கொண்டுவந்த முக்கிய சட்டங்கள் வேளாண் சட்டமாகும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு டிராமா மாஸ்டர், மத்திய அரசு கொண்டுவந்த நிதியை கேட்டு பாஜகவின் மேயர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு டெல்லி மக்களின் தேவைக்கு கொடுக்கப்பட்ட அரசு பணத்தை மக்களுக்கு தர வேண்டுமென போராட்டம் நடத்தினர்.
அரவிந்த் கெஜ்ரிவால் பின் வழியாக முன்னால் சென்று விவசாயிகளிடம் போராடுகிறார் மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது. வயல் வெளிகளில் படம்பிடித்து நானும் விவசாயி எனக் கூறிக்கொள்கிறார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று போராடும் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்திய பிறகு ஆடி காரில் ஊர் சுற்றுகிறார் டெல்லி நடக்கும் போராட்டத்தை தூண்டிவிடுவதில் காங்கிரசின் முக்கிய பங்காகும், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் கொப்பரை தேங்காய்க்கு விவசாயிகள் நலன்கருதி ஆறு வருடத்தில் இரண்டு முறை விலை ஏற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதில் கோவை மாவட்டம் பாஜக பார்வையாளர் மோகன் மந்திரச்சலம், மாவட்ட தலைவர் வசந்தராஜன், ஒன்றிய தலைவர் தங்கராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சதீஷ்குமார், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் தனபால், பலர் கலந்துகொண்டனர்.