கோயம்புத்தூர்: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்தவருக்கு 2024 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினவிழா 08.03.2024 அன்று ஒளவையார் விருது வழங்கிட சிறந்த சேவை புரிந்த மகளிர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது வழங்கிட
- தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
- பெண்களுக்கான இந்த சமூக சேவையை தவிர்த்து வேறு சமூகசேவைகள் இவ்விருதிற்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது.
- இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசினர் விருதுகள் https://awards.tn.kov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் இணையதளத்தில் 20.11.2023-க்குள் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்கள் அடங்கிய கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 22.11.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- அரசு அலுவலர்கள் இவ்விருதிற்கு தகுதியுடையவர் அல்ல.