கோவை மாவட்டம் குனியமுத்தூரில் இயங்கிவரும் பசியில்லா சோறு என்ற அமைப்பு, கடந்த 20 ஆண்டுகளாக வசதியில்லா மக்களுக்கு பல்வேறு சேவைகள், விழிப்புணர்வுகள் போன்றவற்றை இலவசமாக செய்து வருகிறது. இந்த வமைப்பு எய்ட்ஸ், பெண் சிசு கொலை, சிறு சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு, குழந்தை தொழிலாளர், ஹெல்மெட்டின் அவசியம் போன்றவற்றிருக்கான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
'பசியாற சோறு அமைப்பின் விபத்தில்லா கோவை விழிப்புணர்வு' - no accident in kovai
கோவை: பசியாற சோறு அமைப்பினர், 20 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி அதன் அவசியத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
பசியாற சோறு அமைப்பின் விபத்தில்லா கோவை விழிப்புணர்வு
இதன் ஒரு பகுதியாக, விபத்தில்லா கோவையை உருவாக்கும் முயற்சிக்கு சிலர், இன்று ஹெல்மெட் அணியாமல் வந்த 20 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினர். மேலும் அவர்களிடம் இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள் என்றும் அதன் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
மேலும், வாகனத்தில் மூன்று உண்டியல்கள் உள்ளன. அதில் வருகின்ற பணத்தினை கொண்டு மக்களுக்கு இவ்வாறான சேவைகளை செய்து வருகிறது.