கோவை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர்,’’கோவை மட்டுமல்ல, எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.
கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் ஆக வேண்டும். தமிழக அரசின் NIA கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று இருக்கின்றது. ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்குத் தமிழக அரசு செயல் பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கின்றது. ஏன் இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும்.
NIA மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும் கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக சொன்னார்கள், பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல் கவனத்தைச் செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.