பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் குரங்கு அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கடந்த சில மாதங்களாக சரியான மழை இல்லாததும், கோடைக் காலம் என்பதால் அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; குவியும் சுற்றுலா பயணிகள்! - tourist
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வால்பாறை மலைப்பாதையில் உள்ள குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக உள்ளது. இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், "கோடை வெயிலின் தாக்கத்தினால் வனப்பகுதி காய்ந்து காணப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால், வனப்பகுதி பசுமை நிலைக்கு திரும்பியுள்ளது. 90 நாட்களுக்குப் பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்", என்றார்.