தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் வசதி செய்து தராத குடிசைமாற்று வாரியம்: பொதுமக்கள் போராட்டம்! - சரவணம்பட்டி

கோவை: சரவணம்பட்டி அடுத்த கீழநத்தம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வசதி

By

Published : Jul 11, 2019, 8:02 PM IST

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரநத்தம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 1500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு அதில் குடியிருந்தவர்கள் கீழநத்தம் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் கீழநத்தம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல் துறையினர் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் அங்கு விரைந்து குடிநீர் சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். எனினும் உடனடியாக தங்கள் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி மூன்று மணி நேரமாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் போராட்டம்

இதைத் தொடர்ந்து லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அலுவலர்கள் அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details